இரவில் தாமதமாக சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துக்கள், டின்னர் சாப்பிட சரியான நேரம் எது

இரவில் தாமதமாக சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துக்கள், டின்னர் சாப்பிட சரியான நேரம் எது

செய்தி பிரிவு : நீங்கள் இரவு உணவில் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதை விட எந்த நேரத்தில் சாப்பிடுகிறீர்கள் என்பதுதான் மிக முக்கியம். இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் பலரும் நள்ளிரவில் சாப்பிடும் பழக்கத்தை கொண்டுள்ளனர், இது உடல்நலத்தை கடுமையாக பாதிக்கிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, தாமதமாக சாப்பிடுவது செரிமானத்தை பாதிப்பதோடு உடலில் கொழுப்பு சேருவதையும் அதிகரிக்கிறது. இதனால் காலையில் எழும்போது உடல் சோர்வாகவும் மந்தமாகவும் உணரக்கூடும்.

ஆரோக்கியமாக வாழ இரவு 7 மணிக்குள் உணவை முடிப்பதே சிறந்தது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். சீக்கிரம் சாப்பிடுவதால் இரத்த சர்க்கரை அளவு 15% வரை குறைகிறது மற்றும் தூக்கத்தின் தரம் மேம்படுகிறது. குறிப்பாக சர்க்கரை நோய் மற்றும் கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள் தாமதமாக சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். உணவின் அளவை விட நேரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதே நோயற்ற வாழ்விற்கு வழிவகுக்கும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *