இரண்டு ஐசிசி கோப்பைகளை வென்று தந்த சப்ராஸ் அகமது திடீர் ஓய்வு
March 16, 2026

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான சப்ராஸ் அகமது அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவரது தலைமையில் பாகிஸ்தான் அணி இரண்டு முறை ஐசிசி கோப்பைகளை வென்று வரலாற்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இவர் கடைசியாக விளையாடினார்.
தற்போது ஆட்டத்திலிருந்து ஓய்வு பெற்றுள்ள சப்ராஸ் அகமது, விரைவில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்த சப்ராஸ், பயிற்சியாளராக தனது அடுத்த இன்னிங்ஸை தொடங்கவுள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.