இரட்டை சதத்துடன் நியூசிலாந்து மிரட்டல் விண்டீஸ் அணிக்கு எதிராக ரன் மழையை பொழிந்த கான்வே

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி இமாலய இலக்கை நோக்கி முன்னேறி வருகிறது. இரண்டாம் நாள் ஆட்டத்தின் இரண்டாவது பகுதியில் அந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு 461 ரன்களை குவித்துள்ளது. தொடக்க வீரர் டெவன் கான்வே அபாரமாக விளையாடி 31 பவுண்டரிகளுடன் 227 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இவருடன் இணைந்து சிறப்பாக விளையாடிய லாதம் 137 ரன்களை சேர்த்தார்.
தற்போது ரச்சின் (22) மற்றும் பிளெண்டல் (3) ஆகியோர் களத்தில் உள்ளனர். மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் டிராவிலும், இரண்டாவது ஆட்டத்தில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றிருந்தது. தற்போது வலுவான நிலையில் இருக்கும் நியூசிலாந்து அணி, இந்த போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தி தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. விண்டீஸ் பந்துவீச்சாளர்கள் நியூசிலாந்தின் ரன் குவிப்பைத் தடுக்க முடியாமல் திணறி வருகின்றனர்.