இம்ரான் கான் படமிட்ட டி-சர்ட் அணிய அனுமதி வழங்கி கிரிக்கெட் ஆஸ்திரேலியா அதிரடி முடிவு
March 27, 2026

மெல்போர்னில் நடைபெற்ற ஷெஃபீல்டு ஷீல்டு இறுதிப்போட்டியின் போது பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இம்ரான் கானின் விடுதலை குறித்த டி-சர்ட் அணிந்த ரசிகரை பாதுகாப்பு படையினர் தடுத்தனர். இது அரசியல் முழக்கம் என கூறி லூக் பிரவுன் என்ற அந்த ரசிகருக்கு முதலில் தடை விதிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இருப்பினும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா உடனடியாக தலையிட்டு இதனை மனிதாபிமான அடிப்படையிலான விஷயமாக கருதி அனுமதி வழங்கியது. சிறையில் உள்ள இம்ரான் கானின் உடல்நிலை குறித்து சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் கவலை தெரிவித்து வரும் நிலையில் ரசிகர்களின் இந்த ஆதரவு உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.