இம்ரான் கானின் சகோதரிகள் மீது பயங்கரவாத வழக்குப்பதிவு

இம்ரான் கானின் சகோதரிகள் மீது பயங்கரவாத வழக்குப்பதிவு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் சகோதரிகள் அலிமா, உஸ்மா மற்றும் நூரின் கான் நியாசி ஆகியோர் மீது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதியாலா சிறைக்கு வெளியே போராட்டம் நடத்தியதற்காக அவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் பிடிஐ கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் என 35 பேர் மீது வழக்கு பாய்ந்துள்ளது.

போராட்டக்காரர்களை கலைக்க இரசாயனம் கலந்த தண்ணீரை காவல்துறையினர் பயன்படுத்தியதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கண்டனம் தெரிவித்துள்ளது. அமைதியான முறையில் போராடியவர்கள் மீது பயங்கரவாத சட்டத்தை ஏவியுள்ள பாகிஸ்தான் அரசின் இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *