இமயமலையில் தொலைந்த அணுசக்தி கருவி கங்கை நதிக்கு ஆபத்தா
December 17, 2025

1965 ஆம் ஆண்டு சீனாவைக் கண்காணிக்க நந்தாதேவி சிகரத்தில் சிஐஏ மற்றும் ஐபி இணைந்து அணுசக்தியால் இயங்கும் உளவுக்கருவி ஒன்றை பொருத்த முயன்றன. ஆனால் கடுமையான பனிப்புயல் காரணமாக புளூட்டோனியம் எரிபொருள் கொண்ட அந்த சாதனம் அங்கேயே கைவிடப்பட்டது. அடுத்த ஆண்டு தேடியபோது அந்த கருவி பனிச்சரிவில் சிக்கி மாயமானது தெரியவந்தது.
தற்போது அந்த கருவியிலிருந்து கதிர்வீச்சு கசிந்தால், அது கங்கை நதி நீரை நஞ்சாக்கும் என அஞ்சப்படுகிறது. நந்தாதேவி பனிப்பாறைகள் கங்கையின் முக்கிய ஆதாரமாக இருப்பதால், இந்த அணுசக்தி கழிவுகள் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் அபாயம் உள்ளது.