இன்ஸ்டா சிறுவர்களை நேரில் அழைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்

இன்ஸ்டா சிறுவர்களை நேரில் அழைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்

படிப்பின் அவசியத்தை வலியுறுத்தி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பிரபலமான பண்ருட்டி சிறுவர்கள் ஜீவா மற்றும் தேவாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார். சென்னை தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்த அந்த சிறுவர்களிடம் நலம் விசாரித்த முதல்வர், சமூக வலைத்தளங்களில் அவர்கள் பதிவிடும் ஆக்கபூர்வமான கருத்துகளை வெகுவாகப் புகழ்ந்தார்.

தொடர்ந்து சிறுவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர்களுடன் இணைந்து முதல்வர் ஒரு ரீல்ஸ் வீடியோவிலும் பங்கேற்றார். எதிர்காலத்தில் ஆட்சியராகவும் காவல்துறை அதிகாரியாகவும் வர விரும்புவதாகக் கூறிய சிறுவர்களிடம், ரீல்ஸ் போடுவதோடு படிப்பிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என முதல்வர் அன்புடன் அறிவுறுத்தினார். இந்த நெகிழ்ச்சியான சந்திப்பு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *