இனி இவர்களுக்கு கேஸ் சிலிண்டர் கிடைக்காது மத்திய அரசின் அதிரடி உத்தரவு
March 15, 2026

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் சமையல் எரிவாயு இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, குழாய் வழி இயற்கை எரிவாயு (PNG) இணைப்பு வைத்துள்ள தனிநபர்கள் இனி புதிய எல்பிஜி சிலிண்டர் பெற முடியாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே வைத்துள்ள கூடுதல் சிலிண்டர் இணைப்புகளை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு எரிவாயு தேவையை தடையின்றி பூர்த்தி செய்ய பெட்ரோலிய அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. தற்போதைய சூழலில் உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி 31 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிக ரீதியான பயன்பாட்டாளர்கள் சாத்தியமான இடங்களில் பிஎன்ஜி இணைப்பிற்கு மாறவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.