இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கும் மேற்கு ஆசிய போர் ராகுல் காந்தி விடுக்கும் எச்சரிக்கை

இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கும் மேற்கு ஆசிய போர் ராகுல் காந்தி விடுக்கும் எச்சரிக்கை

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் சாதாரணமானதல்ல என்றும் அது உலகளாவிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது இந்தியப் பொருளாதாரம், பங்குச் சந்தை மற்றும் எரிபொருள் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதால், இது குறித்து நாடாளுமன்றத்தில் அவசரமாக விவாதிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். முறையான திட்டமிடல் இல்லையெனில் நாடு பொருளாதாரப் பேரழிவைச் சந்திக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவுடனான இந்தியாவின் ஒப்பந்தங்கள் நாட்டின் நலனுக்கு எதிராக இருப்பதாகவும், உண்மைகள் வெளிவருவதைத் தவிர்க்கவே பிரதமர் விவாதத்தைப் புறக்கணிப்பதாகவும் ராகுல் குற்றம் சாட்டியுள்ளார். பிரதமர் மோடி மிரட்டப்படுவதாலேயே நாடாளுமன்றத்திற்கு வர அஞ்சுகிறார் என்று கூறிய அவர், முக்கியமான மக்கள் பிரச்சினைகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த விவகாரத்தில் அரசு உரிய பதிலளிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *