இந்திய சாலைகளை ஆள வருகிறது மெர்சிடஸ் பென்ஸ் வி கிளாஸ் ஆடம்பர கார்

இந்திய சாலைகளை ஆள வருகிறது மெர்சிடஸ் பென்ஸ் வி கிளாஸ் ஆடம்பர கார்

சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் தனது புகழ்பெற்ற வி கிளாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலை மீண்டும் இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. நவீன வடிவமைப்பில் உருவான இந்த எம்பிவி மாடல், ஒளிரும் கிரில் மற்றும் நேர்த்தியான எல்இடி ஹெட்லேம்ப்களுடன் பார்ப்போரை சுண்டி இழுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஐந்து விதமான வண்ணங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.

காரின் உட்புறத்தில் 12.3 அங்குல இரட்டைத் திரைகள் மற்றும் 64 நிற விளக்குகள் என சொகுசு வசதிகள் ஏராளம். பயணிகளின் பாதுகாப்பிற்காக 7 ஏர்பேக்குகள் மற்றும் 360 டிகிரி கேமரா இதில் இடம் பெற்றுள்ளன. பெட்ரோல் மற்றும் டீசல் என இரு தேர்வுகளில் கிடைக்கும் இந்த அதிநவீன காரின் ஆரம்ப விலை ரூ. 1.4 கோடியாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *