இந்திய சந்தையில் பட்ஜெட் விலையில் அதிரடியாக அறிமுகமானது ரெட்மி 15ஏ 5ஜி
March 27, 2026

சியோமி நிறுவனம் தனது புதிய ரெட்மி 15ஏ 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் ஆரம்ப விலை 12,999 ரூபாயாகும். இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.9 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 6,300 mAh திறன் கொண்ட மெகா பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ஹைப்பர் ஓஎஸ் 3.0 மூலம் இயங்கும் இந்த போனுக்கு 4 ஆண்டுகள் ஆண்ட்ராய்டு அப்டேட்கள் கிடைக்கும்.
இந்த போனில் 32 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா உள்ளது. 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஏப்ரல் 3 முதல் பிளிப்கார்ட் மற்றும் சியோமி தளங்களில் விற்பனைக்கு வரும். நீர் மற்றும் தூசியிலிருந்து பாதுகாப்பு அளிக்க ஐபி52 ரேட்டிங் வசதியும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.