இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நிலை கவலைக்கிடம்

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நிலை கவலைக்கிடம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கடந்த 20 நாட்களாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூச்சுத் திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 101 வயதான அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த செய்தி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *