இந்தியாவுக்குப் பின்னடைவு? நட்சத்திர வீரர் திடீர் மருத்துவமனையில் அனுமதி!

இந்தியாவுக்குப் பின்னடைவு? நட்சத்திர வீரர் திடீர் மருத்துவமனையில் அனுமதி!

நமீபியாவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது. அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் சர்மா வயிற்று உபாதை காரணமாக திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிகிறது.

நடப்பு சாம்பியனான இந்திய அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பத் துடிக்கும் நிலையில், கௌதம் கம்பீருக்கு அபிஷேக்கின் உடல்நிலை பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அவர் விளையாடாத பட்சத்தில், இந்திய அணியின் ஆடும் லெவனில் (Playing XI) முக்கிய மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி மைதானத்தின் பேட்டிங் சாதகமான சூழலைப் பயன்படுத்தி ரன் குவிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தான் போட்டிக்கு முன்னதாக ஒரு பயிற்சியாகவும், நமீபியாவை வீழ்த்த வேண்டிய கட்டாயத்திலும் உள்ள இந்தியாவுக்கு இந்த செய்தி பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டி இன்று இரவு 7 மணிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் தளங்களில் நேரலையாக ஒளிபரப்பாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *