இந்தியாவில் மீண்டும் லாக் டவுன் அமலாகிறதா மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அதிரடி விளக்கம்
March 27, 2026

ஈரான் போர் காரணமாக இந்தியாவில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படலாம் என சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இது போன்ற வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும், அரசிடம் தற்போது அத்தகைய திட்டம் ஏதும் பரிசீலனையில் இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
நாட்டின் எரிசக்தி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய மத்திய அரசு தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் கூறினார். அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பு உள்ளதால், பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என பெட்ரோலிய அமைச்சகம் உறுதிபடத் தெரிவித்துள்ளது.