இந்தியாவில் ஐபோன் உற்பத்தியில் அதிரடி சாதனை படைத்த ஆப்பிள்
March 10, 2026

இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் உற்பத்தி கடந்த ஆண்டை விட 53 சதவீதம் உயர்ந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. 2024-ல் 331 கோடியாக இருந்த உற்பத்தி, 2025-ல் 506 கோடியாக அதிகரித்துள்ளது. சீனா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக முரண்பாடுகளால் உற்பத்தியை பரவலாக்க ஆப்பிள் எடுத்த முடிவே இந்த அபரிமிதமான வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும்.
சர்வதேச அளவில் ஒட்டுமொத்த ஐபோன் உற்பத்தியில் தற்போது 25 சதவீதம் இந்தியாவில் நடைபெறுகிறது. ஃபாக்ஸ்கான், டாடா எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் பெகட்ரான் ஆகிய நிறுவனங்கள் உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதிக்காக இந்த உற்பத்தியை மேற்கொள்கின்றன. இந்த வளர்ச்சியானது உலகளாவிய தொழில்நுட்ப சந்தையில் இந்தியாவின் முக்கியத்துவத்தை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.