“இந்தியாவில் இந்தியச் சட்டம் மட்டுமே செல்லுபடியாகும்,” பூர்னியாவில் பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி, பீகாரில் ரூ.36,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார். பூர்னியா விமான நிலையத்தின் புதிய முனையம் அவற்றில் ஒன்றாகும். பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தேசத்தின் வளர்ச்சிக்கு பீகாரின் வளர்ச்சி அத்தியாவசியம் என்றும், ஏழைகளுக்குச் சேவை செய்வதே தமது இலக்கு என்றும் தெரிவித்தார்.
அப்போது, காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி கட்சிகளை கடுமையாக விமர்சித்த பிரதமர், வாக்கு வங்கி அரசியல் காரணமாக அந்தக் கட்சிகள் ஊடுருவல்காரர்களைப் பாதுகாப்பதாக குற்றம் சாட்டினார். மேலும், “இந்தியாவில் இந்தியச் சட்டம் மட்டுமே செல்லுபடியாகும்” என்றும், சட்டவிரோத ஊடுருவலைத் தடுப்பது என்டிஏ அரசின் பொறுப்பு என்றும் அவர் வலியுறுத்தினார். ஆர்ஜேடி-யின் “ஜங்கிள் ராஜ்” (காட்டுத் தர்பார்) ஆட்சியில் இருந்து பீகார் மக்கள் விடுதலை வேண்டும் என்றும் மோடி கூறினார்.