இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என அப்பாவு பேச்சு

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என அப்பாவு பேச்சு

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சட்டம் ஒழுங்கு மிகச்சிறப்பாக உள்ளதாகவும் இங்கு சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதாகவும் திமுக மூத்த தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். முதல்வரின் சிறப்பான நிர்வாகத்தால் தொழில் முதலீடுகள் குவிந்து வருவதாகவும், சில தனிப்பட்ட சம்பவங்களை முதல்வர் இரும்புக்கரம் கொண்டு அடக்கி வருவதாகவும் அவர் கூறினார். அமைதியான சூழல் நிலவுவதால் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளதாக அவர் வேட்பாளர் நேர்காணலின் போது குறிப்பிட்டார்.

இந்த கருத்து வெளியானவுடன் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். மாநிலத்தில் அன்றாடம் நடக்கும் குற்றச்சம்பவங்கள், கொலை மற்றும் கொள்ளை முயற்சிகளை சுட்டிக்காட்டி அப்பாவுவின் கருத்தை அவர்கள் சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர். தமிழகத்தின் எதார்த்த நிலை அவருக்கு தெரியவில்லையா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *