இந்தியாவிற்கு எதிரான போட்டிக்கு முன் பயத்தில் பாகிஸ்தான்; பத்திரிகையாளர் சந்திப்பு ரத்து

ஆசிய கோப்பை-2025 சூப்பர் ஃபோர் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மோதவுள்ளன. துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டிக்கு முன்னதாக, சர்ச்சைக்குரிய கேள்விகளைத் தவிர்ப்பதற்காக பாகிஸ்தான் அணி திடீரென தனது பத்திரிகையாளர் சந்திப்பை ரத்து செய்துள்ளது. இந்திய அணி வீரர்கள் கைகுலுக்க மறுத்தது தொடர்பாக ஐசிசியிடம் புகார் அளித்ததும், போட்டி நடுவர் ஆண்டி பைக்கிராஃப்ட் உடனான சந்திப்பின் வீடியோவை வெளியிட்டதும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது.
பாகிஸ்தானின் இந்த திடீர் முடிவு கிரிக்கெட் உலகில் புதிய விவாதத்தைத் தூண்டியுள்ளது. மேலும், வீரர்கள் மனதளவில் பலவீனமாக உள்ளதால், அவர்களின் மன உறுதியை அதிகரிக்கும் வகையில் ஒரு ஊக்கமளிக்கும் பேச்சாளரை (Motivational Speaker) நியமித்துள்ளது. கடந்த போட்டியில் இந்திய அணியிடம் தோல்வியடைந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் இந்த செயல்பாடு, அந்த அணியின் அச்சத்தை மேலும் வெளிப்படுத்துகிறது.