இந்தியாவின் மிளகாய் தலைநகரம் என்று அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா

இந்தியாவின் மிளகாய் தலைநகரம் என்று அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள குண்டூர் நகரம் உலகளவில் ‘இந்தியாவின் மிளகாய் தலைநகரம்’ என்று புகழ்பெற்றது. இங்கு விளையும் காரமான மற்றும் அடர் சிவப்பு நிற ‘குண்டூர் சன்னம்’ மிளகாய் அதன் தனித்துவமான சுவைக்காக ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இது இந்தியாவின் மசாலா பொருளாதாரத்தின் முக்கிய அங்கமாக விளங்குகிறது.

ஆசியாவின் மிகப்பெரிய மிளகாய் சந்தையைய் கொண்டுள்ள இந்த நகரம், உலகளாவிய ஏற்றுமதி மையமாகவும் திகழ்கிறது. நவீன உள்கட்டமைப்பு மற்றும் பாரம்பரிய விவசாய முறைகளால் குண்டூர் மிளகாய் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. நவம்பர் முதல் பிப்ரவரி வரை இங்குள்ள சிவப்பு மிளகாய் தோட்டங்களைக் காண சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *