இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த ஈரானுடன் வெளியுறவுத்துறை அமைச்சகம் அவசர ஆலோசனை

இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த ஈரானுடன் வெளியுறவுத்துறை அமைச்சகம் அவசர ஆலோசனை

மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழலில் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஈரான் வெளியுறவு அமைச்சருடன் மூன்று முறை விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

ஈரானில் உள்ள சுமார் 9 ஆயிரம் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து கவலை கொண்டுள்ள டெல்லி, அவர்களை மீட்கும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. பிப்ரவரி 24 எச்சரிக்கைக்குப் பிறகு பலர் நாடு திரும்பிய நிலையில், மீதமுள்ளவர்களை பாதுகாப்பாக அழைத்து வர தூதரக ரீதியாக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கிடையில், ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் மோதலில் இந்தியாவின் பெயரை இழுக்கும் பாகிஸ்தானின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வெளியுறவுத்துறை அமைச்சகம் முற்றிலுமாக நிராகரித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *