இந்தியாவிடம் அதிகரித்த அணு ஆயுதங்கள் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி!
June 17, 2025

அணு குண்டு மிரட்டல் விடுத்து வந்த பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்தியா தனது அணு ஆயுதக் களஞ்சியத்தை அதிகரித்துள்ளது. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, இந்தியாவிடம் தற்போது 180 அணு குண்டுகள் உள்ளன. மேலும், அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் ஏவுகணைகளின் எண்ணிக்கையையும் இந்தியா படிப்படியாக அதிகரித்து வருகிறது. தற்போது பாகிஸ்தானிடம் 170 அணு ஆயுதங்கள் உள்ளன.