இந்தியப் பூச்சியால் ஆஸ்திரேலியாவில் பயிர்களுக்கு ஆபத்து! ரூ.1.58 லட்சம் கோடி மதிப்புள்ள தானியத் தொழில் அபாயத்தில்
September 19, 2025

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட குழந்தைகளின் டயப்பர்களில், ‘காப்ரா வண்டு’ எனப்படும் ஒரு வகை பூச்சியின் புழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது ஆஸ்திரேலியாவின் சுமார் ரூ.1.58 லட்சம் கோடி மதிப்புள்ள தானியத் தொழிலுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இந்த வண்டு, சேமித்து வைக்கப்பட்ட தானியங்களை மிக வேகமாக அழிக்கும் திறன் கொண்டது.
இந்த பூச்சி பரவினால், ஆஸ்திரேலியாவின் தானிய உற்பத்தி மட்டுமின்றி, உலகளாவிய தானிய வர்த்தகமும் கடுமையாகப் பாதிக்கப்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த, அந்நாட்டு அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட அனைத்து டயப்பர்களையும் சந்தையிலிருந்து திரும்பப் பெற்றுள்ளது.