இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் அரை இறுதியில் நுழைந்து யுகி பாம்ப்ரி சாதனை

இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் அரை இறுதியில் நுழைந்து யுகி பாம்ப்ரி சாதனை

அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில் நடைபெற்று வரும் ஏடிபி மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில், இந்தியாவின் யுகி பாம்ப்ரி மற்றும் சுவீடனின் ஆன்ட்ரே கோரன்சன் ஜோடி அபார வெற்றி பெற்றுள்ளது. விறுவிறுப்பான கால் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரியாவின் அலெக்சாண்டர் எர்லர் மற்றும் இத்தாலியின் ஆண்ட்ரியா வவாசோரி ஜோடியை 6-3, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினர்.

யுகி பாம்ப்ரி ஆயிரம் புள்ளிகள் கொண்ட உயரிய ஏடிபி மாஸ்டர்ஸ் தொடரில் அரை இறுதிக்குத் தகுதி பெறுவது இதுவே முதல் முறையாகும். ஒரு மணி நேரம் 30 நிமிடங்கள் நீடித்த இந்தப் போராட்டத்திற்குப் பிறகு, அடுத்த சுற்றில் பிரான்சின் ஆர்தர் ரிண்ரக்னெக் மற்றும் மொனாக்கோவின் வாலண்டைன் வச்செரோட் ஜோடியுடன் இவர்கள் மோத உள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *