இந்தியன் வெல்ஸ் டென்னிஸில் ஜேக் டிராப்பரின் அதிரடி ஆட்டத்தால் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி
March 13, 2026

இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் தொடரின் நான்காவது சுற்றில், நடப்பு சாம்பியனான இங்கிலாந்தின் ஜேக் டிராப்பர் 4-6, 6-4, 7-6 (5) என்ற செட் கணக்கில் டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தினார். காயத்திலிருந்து மீண்டு எட்டு மாதங்களுக்குப் பிறகு களம் கண்ட 24 வயது டிராப்பர், இந்த வெற்றியின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
ஐந்து முறை சாம்பியனான 38 வயது ஜோகோவிச் இத்தொடரிலிருந்து வெளியேறிய நிலையில், டிராப்பர் கால் இறுதியில் மெத்வதேவுடன் மோதுகிறார். தோல்விக்குப் பிறகு தன்னை வீழ்த்திய இளம் வீரருக்கு ஜோகோவிச் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.