இதய அடைப்பின் இந்த ஏழு அறிகுறிகளை அலட்சியப்படுத்தினால் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்

இதய அடைப்பின் இந்த ஏழு அறிகுறிகளை அலட்சியப்படுத்தினால் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்

இதயத் தமனிகளில் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் படிவதால் இரத்த ஓட்டம் பாதிக்கப்படுவது தற்போது உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணமாக உள்ளது. மருத்துவ ரீதியாக ‘அதிரோஸ்க்லரோசிஸ்’ என்று அழைக்கப்படும் இந்த நிலை, இதயத்தின் செயல்பாட்டைக் குறைப்பதுடன் தமனிகள் முற்றிலும் அடைக்கப்படும்போது உயிருக்கு ஆபத்தான மாரடைப்பை உண்டாக்குகிறது. எனவே இதன் ஆரம்பக்கால எச்சரிக்கை அறிகுறிகளைப் புரிந்துகொள்வது மிகவும் அவசியமாகும்.

நெஞ்சு அசௌகரியம், மூச்சுத் திணறல் மற்றும் அதீத சோர்வு ஆகியவை இதய அடைப்பின் முதன்மை அறிகுறிகளாகும். இது தவிர அதிகப்படியான வியர்வை, குமட்டல் அல்லது சீரற்ற இதயத் துடிப்பு போன்றவற்றை சாதாரண செரிமானப் பிரச்சனை என்று கருதி அலட்சியப்படுத்தக்கூடாது. அடைப்பின் தீவிரத்தைப் பொறுத்து மருத்துவர்கள் ஆஞ்சியோபிளாஸ்டி அல்லது பைபாஸ் அறுவை சிகிச்சையை பரிந்துரைக்கின்றனர். இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுவது நலம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *