ஆஸ்கார் மேடையில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்று சாதனை படைத்தது ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்

ஆஸ்கார் மேடையில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்று சாதனை படைத்தது ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்

உலக சினிமாவின் உயரிய அங்கீகாரமான அகாடமி விருதுகளில் இயக்குனர் பால் தாமஸ் ஆண்டர்சனின் ‘ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்’ சிறந்த திரைப்படத்திற்கான விருதை தட்டிச் சென்றது. ரயான் கூக்லரின் ‘சின்னர்ஸ்’ மற்றும் ‘எஃப்1: தி மூவி’ போன்ற வலுவான போட்டியாளர்களைப் பின்னுக்குத் தள்ளி இத்திரைப்படம் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. சிறந்த படத்துடன் பால் தாமஸ் ஆண்டர்சன் சிறந்த இயக்குனருக்கான விருதையும் வென்றார். இந்த விழாவை கோனன் ஓ’பிரையன் தொகுத்து வழங்க, பிரியங்கா சோப்ரா விருதை வழங்கினார்.

விருதைப் பெற்றுக் கொண்ட ஆண்டர்சன் தனது படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்ததுடன், இது ஒரு சவாலான பயணம் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். இத்திரைப்படம் சமகால சமூகம் மற்றும் அரசியலின் தனித்துவமான ஆவணமாக அமைந்துள்ளதாக விமர்சகர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். மேலும் நெட்ஃபிக்ஸ் தயாரிப்பான ‘கே-பாப் டெமன் ஹன்ஸ்டர்ஸ்’ படத்தின் ‘கோல்டன்’ பாடல் சிறந்த பாடலுக்கான விருதை வென்றது. தகுதியான படைப்பிற்கே இந்த உயரிய கௌரவம் கிடைத்துள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *