ஆறு மாத சிறைவாசத்திற்கு பின் லடாக் போராட்ட நாயகன் சோனம் வாங்சுக் அதிரடி விடுதலை
March 15, 2026

லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி போராட்டத்தில் ஈடுபட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக், ஆறு மாதங்களுக்குப் பிறகு சிறையிலிருந்து விடுதலையாகிறார். கடந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார். தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் அவரது தடுப்புக் காவலை ரத்து செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி தொடுத்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு தடுப்புக் காவலை மறுபரிசீலனை செய்ய அறிவுறுத்தியது. நீதிமன்றத்தின் இந்த தலையீட்டைத் தொடர்ந்து அரசு இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர் வெளியே வருவது லடாக் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.