ஆர்ஜென்டீனாவை வீழ்த்துவோம் – ரபீனியாவின் வெட்கங்கெட்ட பேச்சு!

ஆர்ஜென்டீனாவை வீழ்த்துவோம் – ரபீனியாவின் வெட்கங்கெட்ட பேச்சு!

பிரேசிலின் நட்சத்திர கால்பந்து வீரர் ரபீனியா, உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் ஆர்ஜென்டீனாவை எதிர்கொள்ளும் முன்னர் வீழ்த்துவோம் என வீராவேசமாகப் பேசியுள்ளார். ரொமாரியோவுடன் நடந்த நேர்காணலில், “நாங்கள் ஆர்ஜென்டீனாவை களத்திலும், களத்துக்கு வெளியேயும் வீழ்த்துவோம்” என்று கூறிய அவர், ஆங்கிலத்தில் ஒரு ஆபாச வார்த்தையையும் பயன்படுத்தியுள்ளார். மேலும், “நான் அவர்களுக்கு எதிராக கோல் அடிப்பேன், என் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்துவேன்” என்று சவால் விடுத்துள்ளார். 2021-ல் ஆர்ஜென்டீனா வீரர் நிகோலஸ் ஓடமென்டியால் ரபீனியா காயமடைந்த நிகழ்வும் இதற்கு பின்னணியாக இருக்கலாம்.

தற்போது, தென் அமெரிக்க தகுதிச் சுற்றில் ஆர்ஜென்டீனா 28 புள்ளிகளுடன் முதலிடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளது. நாளை காலை 5:30 மணிக்கு நடைபெறும் போட்டியில் பிரேசில் டிரா செய்தாலே உலகக் கோப்பைக்கு தகுதி பெறும். இந்த பேச்சுவார்த்தை மற்றும் போட்டியின் முக்கியத்துவம் காரணமாக, இந்த மோதல் உலகளவில் கண்காணிக்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *