ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலர் உயிரிழப்பு
March 13, 2026

ஆப்கானிஸ்தானின் காபூல் மற்றும் காந்தகார் உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் படைகள் நள்ளிரவில் திடீர் வான்வழித் தாக்குதலை நடத்தின. இந்தத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாகித் குற்றம் சாட்டியுள்ளார். இருப்பினும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
கடந்த மாதம் ஆப்கான் நடத்திய தாக்குதலில் 55 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. நூற்றுக்கணக்கான தலிபான் கிளர்ச்சியாளர்களைக் கொன்றுள்ளதாக பாகிஸ்தான் கூறியுள்ள நிலையில், இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தலிபான் அரசு விரைவில் பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.