ஆன்லைன் டிரேடிங் ஆசையில் ரூ 6.90 லட்சத்தை இழந்த தஞ்சை தனியார் மருத்துவமனை டாக்டர்
March 16, 2026

தஞ்சாவூரைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை மருத்துவர் ஒருவர் ஆன்லைன் டிரேடிங் மூலம் அதிக லாபம் ஈட்டலாம் என்ற மர்ம நபர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி ரூ.6.90 லட்சத்தை இழந்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் முகநூல் மற்றும் வாட்ஸ்அப் மூலம் இவரைத் தொடர்பு கொண்ட கும்பல், போலி முதலீட்டு குழுவில் இணைத்து 10 தவணைகளாகப் பணத்தைப் பறித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மருத்துவர் லாபத் தொகையைக் கேட்டபோது, மர்ம நபர்கள் தொடர்பைத் துண்டித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் தஞ்சை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோசடிப் பணம் ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநில வங்கி கணக்குகளுக்குச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஆன்லைன் மோசடிகளில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.