ஆந்திராவில் பேருந்து மற்றும் லாரி மோதி பயங்கர தீ விபத்து 14 பேர் உடல் கருகி உயிரிழப்பு
March 27, 2026

தெலங்கானாவிலிருந்து நெல்லூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் டிப்பா் லாரி மீது மோதி தீப்பிடித்தது. இந்த கோர விபத்தில் ஒரு குழந்தை மற்றும் 7 பெண்கள் உட்பட மொத்தம் 14 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். பழுதான பேருந்தை சரிசெய்து பயணத்தைத் தொடர்ந்த ஒரு மணி நேரத்திலேயே இந்த துயரம் நிகழ்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த 27 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆந்திர அரசு 5 லட்சம் ரூபாயும், பிரதமர் 2 லட்சம் ரூபாயும் நிவாரணம் அறிவித்துள்ளனர். தனது மகனைப் பாதுகாப்பாக வெளியே தள்ளிவிட்டு தாய் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீட்புப் பணிகள் நிறைவடைந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.