ஆதாரமில்லாத இரண்டாவது திருமண புகாரில் முதியவர் மீதான வழக்கை ரத்து செய்தது நீதிமன்றம்
March 18, 2026

திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்வது குற்றமாகாது எனக்கூறி 73 வயது முதியவர் மீதான வழக்கை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தனது கணவர் வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்துவதாக 66 வயது மனைவி தொடர்ந்த வழக்கில், இரண்டாவது திருமணம் நடந்ததற்கான சடங்குகள் அல்லது போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என நீதிபதி ஆர்.நடராஜ் சுட்டிக்காட்டினார்.
தகாத உறவு அல்லது லிவ்-இன் முறையை சட்டப்படி இரண்டாவது திருமணமாக கருத முடியாது என நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. மேலும் தந்தை வேறொரு பெண்ணுடன் வாழ்வதை வேடிக்கை பார்த்ததற்காக மகன்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்றும், உரிய ஆதாரங்கள் இல்லாததால் முதியவர் மற்றும் அவரது மகன்கள் விடுவிக்கப்படுவதாகவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.