ஆசிரியர் பணி நியமன காலக்கெடுவை நீட்டித்தது உச்ச நீதிமன்றம்

ஆசிரியர் பணி நியமன காலக்கெடுவை நீட்டித்தது உச்ச நீதிமன்றம்

மேற்கு வங்கத்தில் பள்ளி சேவை ஆணையத்தின் (SSC) ஆசிரியர் பணி நியமன பணிகளை முடிக்க உச்ச நீதிமன்றம் மேலும் எட்டு மாத கால அவகாசம் வழங்கியுள்ளது. நீதியரசர் சஞ்சய் குமார் அமர்வு, இப்பணிகளை ஆகஸ்ட் 31-க்குள் நிறைவு செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் மூலம், தகுதியுள்ள ஆசிரியர்கள் ஆகஸ்ட் மாதம் வரை தொடர்ந்து பணியாற்றி ஊதியம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மாநில அரசின் கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் இந்த நீட்டிப்பை வழங்கியதை கல்வி அமைச்சர் பிரத்யா பாசு வரவேற்றுள்ளார். முன்னதாக டிசம்பர் 31-க்குள் பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. தற்போது ஜனவரி 7-ல் மேல்நிலை தேர்வு முடிவுகளும், மார்ச் மாதத்திற்குள் இடைநிலை தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் இறுதிக்குள் முழுமையான பணி நியமனங்கள் உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *