ஆசிய கோப்பை: இந்திய அணியின் புதிய கேப்டன் யார்?

பாகிஸ்தானுக்கு எதிரான 7 விக்கெட் வெற்றியுடன், இந்திய அணி ஆசிய கோப்பையின் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. செப்டம்பர் 19 அன்று ஓமனுக்கு எதிராக நடைபெறவிருக்கும் போட்டியில், அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் அறுவை சிகிச்சையிலிருந்து திரும்பிய அவருக்கு இந்த ஓய்வு அவசியமானதாக கருதப்படுகிறது. சூர்யகுமார் இல்லாத பட்சத்தில், அணியை வழிநடத்தப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சூர்யகுமார் யாதவுக்குப் பதிலாக, இளம் தொடக்க வீரர் ஷுப்மன் கில் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்கக்கூடும் என தகவல்கள் கூறுகின்றன. அப்படி நடந்தால், சஞ்சு சாம்சன் மூன்றாவது இடத்தில் களமிறங்குவார், மேலும் ஜிதேஷ் ஷர்மா அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது. கேப்டனாக சூர்யகுமார் யாதவின் சாதனை சிறப்பானது. 26 போட்டிகளில் 21 வெற்றிகளுடன் அவரது வெற்றி விகிதம் 80.76% ஆகும். ஓமனுக்கு எதிரான போட்டியில் ஓய்வுக்குப் பிறகு, சூப்பர் 4 போட்டிகளில் அவர் மீண்டும் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.