அலர்ட்! மருத்துவர் ஆலோசனை இன்றி வைட்டமின் D எடுத்தால் சிறுநீரகம் செயலிழக்குமா?

அலர்ட்! மருத்துவர் ஆலோசனை இன்றி வைட்டமின் D எடுத்தால் சிறுநீரகம் செயலிழக்குமா?

மருத்துவரின் ஆலோசனையின்றி அதிகப்படியான வைட்டமின் D சப்ளிமென்ட்களை எடுத்துக்கொள்வது சிறுநீரகங்களுக்கு தீவிரமான சேதத்தை விளைவிக்கக்கூடும். சென்னை ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் நெஃப்ராலஜி மற்றும் யூராலஜி நிறுவனத்தின் நிபுணர் சிறுநீரக மருத்துவர் (Nephrologist) டாக்டர் நவீனாத் எம் இதுகுறித்து கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒரு நாளைக்கு 4,000 IU-க்கு மேல் அல்லது சில சமயங்களில் 60,000 IU போன்ற அதிக அளவுகளை உட்கொள்ளும்போது, இரத்தத்தில் கால்சியம் அளவு (Hypercalcemia) அபாயகரமான அளவிற்கு அதிகரிக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அதிகப்படியான கால்சியம் காரணமாக சிறுநீரகம் அதிக அழுத்தத்துடன் செயல்பட வேண்டியுள்ளது, இது காலப்போக்கில் அதன் நுட்பமான வடிகட்டி அலகுகளை சேதப்படுத்துகிறது. டாக்டர் நவீநாத்தின் கூற்றுப்படி, இந்த நிலை சிறுநீரக கற்கள் உருவாக வழிவகுத்து, இறுதியாக சிறுநீரகம் செயலிழக்க காரணமாகிறது. எனவே, வாந்தி, அதிக சோர்வு அல்லது தாகம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி, இரத்தப் பரிசோதனை மூலம் வைட்டமின் D அளவை உறுதி செய்த பின்னரே சப்ளிமென்ட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *