அரபு நாடுகளில் ஈரானின் மலிவு விலை ட்ரோன்கள் மற்றும் அமெரிக்க உயர் தொழில்நுட்பங்களுக்கு இடையிலான புதிய போர் சமன்பாடு

மத்திய கிழக்கின் போர் உத்திகள் இப்போது தொழில்நுட்பம் மற்றும் செலவுத்திறன் சார்ந்த போட்டியாக மாறியுள்ளன. ஈரான் தனது மலிவான ‘ஷாஹேத்’ ட்ரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் எதிரிகளின் வான் பாதுகாப்பு மண்டலத்தை திணறடிக்கும் ‘swarm attack’ முறையை கையாள்கிறது. ஷஹாப்-3 மற்றும் ஃபத்தா ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் ஈரானின் இந்த ராணுவ பலத்தை மேலும் அதிகரித்துள்ளன.
இதற்குப் பதிலடியாக அமெரிக்கா பி-2 ஸ்பிரிட் மற்றும் பங்கர்-பிளாஸ்டர் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறது. இருப்பினும் ஈரானின் மலிவு விலை ட்ரோன்களை எதிர்கொள்ள விலை உயர்ந்த பேட்ரியாட் ஏவுகணைகளை பயன்படுத்துவது அமெரிக்காவிற்கு பொருளாதார ரீதியாக சவாலாக உள்ளது. இந்த போர் இப்போது நவீன ஆயுதங்களுக்கானது மட்டுமல்லாமல் யார் நீண்ட காலம் நிதி ரீதியாக நிலைத்து நிற்க முடியும் என்பதற்கான போட்டியாகவும் மாறியுள்ளது.