அரசியல் மேடைகளில் அவதூறுகளை அள்ளி வீசுபவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடுத்த அதிரடி பதில்
March 18, 2026

மக்கள் நலனுக்கான சாதனைகள் மற்றும் கொள்கைகள் இல்லாதவர்கள் மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசி வருவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பேசிய சர்ச்சை பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தமிழக மக்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருப்பதாக முதல்வர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
திமுக அரசு தரவுகளுடன் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை வடிவமைத்து வருவதாக குறிப்பிட்ட அவர், ஒருபுறம் வளர்ச்சிப் பணிகள் நடப்பதாகக் கூறினார். மறுபுறம் தரமற்ற விமர்சனங்களை முன்வைப்பவர்களை மக்கள் புறக்கணிப்பார்கள் என்றும், வளர்ச்சியையே மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்றும் முதல்வர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.