அமேசான் மீண்டும் பணிநீக்கம்: 14,000 பேர் வேலையிழப்பு

அமேசான் மீண்டும் பணிநீக்கம்: 14,000 பேர் வேலையிழப்பு

இ-காமெர்ஸ் நிறுவனமான அமேசான், தனது செலவினங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மேலும் 14,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னர், கடந்த நவம்பரில் அமேசான் 18,000 பணியாளர்களை பணி நீக்கம் செய்தது.

தற்போது மேற்கொள்ளப்படவுள்ள இந்த புதிய நடவடிக்கை, கார்ப்பரேட் (Corporate) பதவிகளில் உள்ள 14,000 பணியாளர்களை பாதிக்க உள்ளது. அமேசான் இந்த முடிவை செலவினங்களை குறைத்து அதிக வருவாய் ஈட்டும் நோக்கில் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த பணிநீக்கத்தால் ஆண்டுதோறும் ரூ.31,000 கோடிக்கும் மேல் செலவு குறைக்க முடியும் என அமேசான் மதிப்பீடு செய்துள்ளது. பணிநீக்கம் செய்தாலும், முக்கிய வளர்ச்சிப் பகுதிகளில் முதலீடு தொடரும் என நிறுவனத்தின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *