அமெரிக்க ரேடார்களுக்கே சவால் விடும் ஈரானின் மலிவு விலை ட்ரோன்கள்

அமெரிக்க ரேடார்களுக்கே சவால் விடும் ஈரானின் மலிவு விலை ட்ரோன்கள்

ஈரானின் ‘ஷாகேத்’ ரக ட்ரோன்கள் அமெரிக்காவின் வான் பாதுகாப்பு அமைப்பிற்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளன. மிகக் குறைந்த உயரத்தில் மெதுவாகப் பறக்கும் இந்த ட்ரோன்களை அமெரிக்க ரேடார்களால் துல்லியமாகக் கண்டறிய முடிவதில்லை. வெறும் 20,000 டாலர் மதிப்பிலான ஒரு ட்ரோனை அழிக்க அமெரிக்கா மில்லியன் கணக்கான டாலர்களைச் செலவிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இது அந்நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாதுகாப்பிற்கும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

கடந்த 2022-ல் உக்ரைன் வழங்க முன்வந்த பாதுகாப்பு ஆலோசனைகளை அமெரிக்கா நிராகரித்ததே தற்போதைய இந்த இக்கட்டான நிலைக்குக் காரணமாகக் கருதப்படுகிறது. ஈரானால் மிக விரைவாகத் தயாரிக்கப்படும் இந்த ட்ரோன்களை எதிர்கொள்ள புதிய தொழில்நுட்பத்தைத் தேடி அமெரிக்கா தவித்து வருகிறது. வல்லரசு நாடுகளுக்கே சவால் விடும் வகையில் ஈரானின் இந்த டிரோன் தொழில்நுட்பம் தற்போது உலக அரங்கில் உற்றுநோக்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *