அமெரிக்க ராணுவ தாக்குதலில் போதைப்பொருள் மன்னன் எல் மென்சோ கொல்லப்பட்டதால் மெக்சிகோவில் கலவரம்
February 23, 2026

மெக்சிகோவின் தேடப்பட்டு வந்த பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் எல் மென்சோ எனப்படும் நெமேசியோ ரூபன் அமெரிக்க ராணுவத்தின் அதிரடி நடவடிக்கையில் கொல்லப்பட்டார். முன்னாள் காவல்துறை அதிகாரியான இவர் மீது கொலை மற்றும் ஆள்கடத்தல் உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. நீண்ட தேடுதல் வேட்டைக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த தாக்குதலில் அவர் உயிரிழந்தார்.
இந்த மரணத்தைத் தொடர்ந்து மெக்சிகோவின் பல மாகாணங்கள் போர்க்களமாக மாறியுள்ளன. மென்சோவின் ஆதரவாளர்கள் வீதிகள் மற்றும் கடைகளுக்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டு வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது. ஏற்கனவே வெனிசுலா அதிபர் கைது செய்யப்பட்ட நிலையில், அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை மெக்சிகோ அரசுக்கு பெரும் பாதுகாப்பு சவாலை ஏற்படுத்தியுள்ளது.