அமெரிக்க போர்க்கப்பலில் கழிப்பறை சிக்கல் ஈரானிய தாக்குதல் திட்டம் தள்ளிப்போகுமா

உலகின் மிகவும் விலையுயர்ந்த அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டு தற்போது கடுமையான தொழில்நுட்ப சிக்கலில் சிக்கியுள்ளது. 13 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த கப்பலின் நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்பு செயலிழந்ததால், அதில் உள்ள 4,600-க்கும் மேற்பட்ட வீரர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஓமன் வளைகுடா நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்த கப்பலில் அடிப்படை வசதிகள் இன்றி வீரர்கள் தவித்து வருகின்றனர்.
இந்த பிளம்பிங் கோளாறு ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளை பாதிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. வீரர்களின் மனநிலை மற்றும் நீண்டகால பணிச்சுமை காரணமாக போர் திட்டங்கள் ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளது. 2017 முதல் நீடிக்கும் இந்த தொடர் சிக்கலை சரி செய்ய கப்பலை மீண்டும் துறைமுகத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் அமெரிக்க கடற்படைக்கு ஏற்பட்டுள்ளது, இது போர்க்கள வியூகத்தில் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.