அமெரிக்க படையெடுப்பை எதிர்கொள்ள ஈரானில் தயாராகும் 10 லட்சம் வீரர்கள்

அமெரிக்க படையெடுப்பை எதிர்கொள்ள ஈரானில் தயாராகும் 10 லட்சம் வீரர்கள்

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்திற்கு மத்தியில், அந்நாட்டு இளைஞர்கள் ஆயதமேந்திப் போராடத் தயாராகி வருகின்றனர். உள்நாட்டு எதிர்ப்புகளைத் தள்ளிவைத்துவிட்டு, தற்போதைய ஆட்சியைக் காக்க 10 லட்சம் பேர் கொண்ட பிரம்மாண்ட படை உருவாக்கப்பட்டுள்ளது. ஈரானிய புரட்சிகர காவல்படை மற்றும் பாசிஜ் பிரிவுகளில் இணைந்து ஆயிரக்கணக்கானோர் தீவிரப் போர் பயிற்சியைப் பெற்று வருகின்றனர்.

மத்திய கிழக்கிற்கு கூடுதல் படைகளை அனுப்ப அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்குப் பதிலடியாகவே ஈரான் தனது இராணுவ வலிமையைப் பெருக்கி வருகிறது. ஈரானின் புவியியல் அமைப்பு மற்றும் ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகளின் ஆதரவு காரணமாக, அமெரிக்காவிற்கு இந்த நிலப்போர் மிகப்பெரிய சவாலாகவும் ஆபத்தானதாகவும் இருக்கும் என அரசியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *