அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் செல்வாக்கு சரிந்ததால் குடியரசுக் கட்சியினர் கடும் அதிர்ச்சி

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் செல்வாக்கு சரிந்ததால் குடியரசுக் கட்சியினர் கடும் அதிர்ச்சி

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகக்குறைந்த அளவிலான மக்கள் ஆதரவைப் பெற்றுள்ளார். சமீபத்திய காலப் மற்றும் சிஎன்என் கருத்துக் கணிப்புகளின்படி சுமார் 36 முதல் 39 சதவீத மக்கள் மட்டுமே அவரது ஆட்சியை ஆதரிக்கின்றனர். எகிறும் விலைவாசி உயர்வு, பணவீக்கம் மற்றும் கடுமையான குடியேற்றக் கொள்கைகள் காரணமாக 60 சதவீதத்திற்கும் அதிகமான அமெரிக்கர்கள் ட்ரம்பின் செயல்பாடுகள் குறித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதாரச் சிக்கல்கள் மற்றும் அகதிகள் வெளியேற்றம் போன்ற அதிரடி நடவடிக்கைகள் காரணமாக நடுநிலை வாக்காளர்கள் மற்றும் இளைஞர்கள் ட்ரம்பிடம் இருந்து விலகிச் செல்கின்றனர். இந்த அதிருப்தி வரும் 2026 இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியது மற்றும் இறக்குமதி வரிகளால் அதிகரித்த வாழ்வாதாரச் செலவுகள் காரணமாக தற்போது ட்ரம்பின் செல்வாக்கு அவரது முந்தைய ஆட்சியின் மிகக்குறைந்த நிலையை எட்டியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *