அமெரிக்கா மற்றும் இந்தியாவால் முடியாததை சாதித்த ஒரு குட்டி நாடு, ஒரு துளி உணவைக் கூட இறக்குமதி செய்வதில்லை!

அமெரிக்கா மற்றும் இந்தியாவால் முடியாததை சாதித்த ஒரு குட்டி நாடு, ஒரு துளி உணவைக் கூட இறக்குமதி செய்வதில்லை!

செய்தி பிரிவு : தனது நாட்டு மக்களின் பசியைப் போக்க வெளிநாடுகளிடம் கையேந்தாத ஒரு நாடு உலகில் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? தென் அமெரிக்காவிலுள்ள கயானா (Guyana) என்ற சிறிய நாடுதான் இந்தச் சாதனையைப் படைத்துள்ளது. இந்தியா, அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளே பருப்பு அல்லது எண்ணெய் வகைகளுக்காக மற்ற நாடுகளைச் சார்ந்திருக்கும் நிலையில், கயானா தனக்குத் தேவையான அனைத்து உணவுப் பொருட்களையும் தனது சொந்த மண்ணிலேயே உற்பத்தி செய்கிறது. இது உலகளாவிய நெருக்கடி காலங்களிலும் அந்த நாட்டு மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

இந்த வெற்றியின் பின்னணியில் இந்திய வம்சாவளியினரின் பங்களிப்பு மிக அதிகம். கயானாவின் மக்கள் தொகையில் சுமார் 40 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். அமேசான் நதிப் படுகையின் வளமான மண்ணும், அந்நாட்டு அரசின் முறையான விவசாயத் திட்டங்களும் கயானாவை ஒரு தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றியுள்ளன. இயற்கையைப் பாதுகாத்துக் கொண்டே எப்படி உணவு உற்பத்தியில் முதலிடம் பிடிக்கலாம் என்பதற்கு கயானா இன்று உலகிற்கே ஒரு சிறந்த பாடமாகத் திகழ்கிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *