அமெரிக்கா நெருப்புடன் விளையாடுகிறது ட்ரம்ப்பின் அதிரடி முடிவால் சீனாவிற்கு வந்த கடும் கோபம்

அமெரிக்கா நெருப்புடன் விளையாடுகிறது ட்ரம்ப்பின் அதிரடி முடிவால் சீனாவிற்கு வந்த கடும் கோபம்

தைவானுக்கு சுமார் 92,000 கோடி ரூபாய் மதிப்பிலான அதிநவீன ஆயுதங்களை வழங்க அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் 82 ஹைமார்ஸ் ராக்கெட் அமைப்புகள் மற்றும் 420 ஏவுகணைகள் தைவானுக்கு கிடைக்கவுள்ளன. இது சீனாவின் ராணுவ வலிமையை முறியடிக்கும் வகையில் அமைந்துள்ளதால் பெய்ஜிங் கடும் கோபத்தில் உள்ளது. இந்த ஆயுத விநியோகம் தைவான் நீரிணைப் பகுதியில் பெரும் போருக்கான சூழலை உருவாக்கியுள்ளதாக சீனா கருதுகிறது.

சீன வெளியுறவு அமைச்சகம் அமெரிக்காவிற்கு விடுத்துள்ள எச்சரிக்கையில் அமெரிக்கா தன் மீது தானே நெருப்பை அள்ளிப் போட்டுக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளது. சீனாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சீனா எச்சரித்துள்ளது. இதற்கிடையில் தைவானைத் தாக்குவதற்கு ஏதுவாக ரஷ்யா சீனாவிற்கு ராணுவ தளவாடங்களை வழங்கி உதவி வருவதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சர்வதேச அளவில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *