அமெரிக்கா தலையிட்டால் மட்டுமே போர் முடிவுக்கு வரும் என ஈரான் விடுத்துள்ள அதிரடி கோரிக்கை
March 14, 2026

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகளுடனான மோதலால் பாரசீக வளைகுடா பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியுள்ளதால் உலகளவில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்துப் பேசிய ஈரான் பிரதிநிதி டாக்டர் அப்துல் மஜித் ஹக்கீம் இலாஹி, தங்களுக்குப் போரில் விருப்பமில்லை என்றும், பேச்சுவார்த்தை மூலம் அமைதி காணவே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த உலகளாவிய நெருக்கடியைத் தீர்க்க உலகத் தலைவர்கள் உடனடியாக அமெரிக்காவிடம் வலியுறுத்த வேண்டும் என ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது. பிப்ரவரி 28 முதல் நீடித்து வரும் இந்த மோதலில் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகியுள்ளன. எரிபொருள் தட்டுப்பாட்டால் மக்கள் அவதிப்படுவதைத் தவிர்க்க, போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா முன்வர வேண்டும் என்பதே ஈரானின் தற்போதைய முக்கிய நிலைப்பாடாக உள்ளது.