அமெரிக்கா கால் வைத்தால் நரகம் நிச்சயம் என 10 லட்சம் வீரர்களைத் திரட்டும் ஈரான்

மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடிக்கும் சூழலில், அமெரிக்கப் படைகள் ஈரானுக்குள் நுழைந்தால் அவர்களுக்குப் பாடம் புகட்ட ஈரான் ராணுவம் தயாராகி வருகிறது. இதற்காக சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான வீரர்களை ஈரான் அணிதிரட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. டிரம்ப் போர் நிறுத்தத்தைப் பற்றி பேசினாலும், ஈரான் தனது தற்காப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி அமெரிக்காவிற்குப் பதிலடி கொடுக்கக் காத்திருக்கிறது.
ஈரானிய ஊடகங்கள் அமெரிக்கப் படைகளுக்கு இந்த யுத்தம் ஒரு நரகமாக அமையும் என எச்சரித்துள்ளன. இந்த மோதலால் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி விநியோகம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. போர் நீடித்தால் எரிபொருள் விலை உயர்ந்து உலகப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.