அமெரிக்கா அதிரடி: தென் சீனக் கடலில் மூழ்கிய ராணுவ ரகசியங்களை மீட்டதில் சீனாவுக்குப் பெரும் பின்னடைவு!

ஆசியாவின் மிகவும் பதற்றமான இரண்டு பகுதிகளில் கடலில் மூழ்கியிருந்த அதிநவீன ராணுவ உபகரணங்களை அமெரிக்க ராணுவம் வெற்றிகரமாக மீட்டெடுத்துள்ளது. தென் கொரியாவின் மேற்கு கடற்கரைக்கு அருகில் விபத்துக்குள்ளான MQ-9 ரீப்பர் ட்ரோனின் பாகங்கள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளன. மேலும், டிசம்பர் இரண்டாம் வாரத்தில் தென் சீனக் கடலில் மூழ்கியிருந்த இரண்டு ஃபைட்டர் ஜெட் மற்றும் ஹெலிகாப்டரின் பாகங்களையும் அமெரிக்க கடற்படை ஆழமான கடலில் இருந்து பாதுகாப்பாக வெளியே கொண்டுவந்துள்ளது.
இந்த இரண்டு மீட்பு நடவடிக்கைகளும் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. தென் சீனக் கடலின் முழுப் பகுதியையும் உரிமை கொண்டாடி சீனா கண்காணித்து வரும் நிலையில், அமெரிக்காவின் மேம்பட்ட இராணுவ தொழில்நுட்பம் எதிரிகளின் கைகளில் கிடைப்பதைத் தடுக்க இந்த மூழ்கிய உபகரணங்களை மீட்டது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மூலோபாய நடவடிக்கையாகும்.