அமெரிக்காவை பழிவாங்குவோம் என்று புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி அதிரடி எச்சரிக்கை

அமெரிக்காவை பழிவாங்குவோம் என்று புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி அதிரடி எச்சரிக்கை

ஈரானின் அணுஆயுத கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அலி கமேனி கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து, ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா கமேனி தனது முதல் உரையில் அமெரிக்காவிற்கு எதிராக போர் பிரகடனம் செய்துள்ளார். அலி கமேனி மற்றும் போரில் பலியான ஒவ்வொருவருக்காகவும் அமெரிக்காவை நிச்சயம் பழிவாங்குவோம் என அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் உடனடியாக மூடப்பட வேண்டும், இல்லையெனில் அவை முற்றிலுமாக அழிக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார். மேலும், அமெரிக்காவிற்கு ஆதரவு அளிக்கும் அண்டை நாடுகள் மீதான தாக்குதல் தொடரும் என்றும், ஹோர்முஸ் நீரிணையை ஈரான் கட்டுப்படுத்தும் என்றும் அவர் கூறினார். ஈரான் எக்காரணம் கொண்டும் போரிலிருந்து பின்வாங்காது என்பதை அவர் தனது அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *