அமெரிக்காவை நம்பி மோடி அரசு எடுத்த முடிவு இந்திய பொருளாதாரத்தை நிலைகுலைய வைக்குமா

அமெரிக்காவை நம்பி மோடி அரசு எடுத்த முடிவு இந்திய பொருளாதாரத்தை நிலைகுலைய வைக்குமா

ஈரான் போர் மற்றும் அமெரிக்காவின் நிபந்தனைகளால் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு கடும் சரிவைச் சந்திக்க நேரிடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ரஷ்யாவிடம் ரூபாயில் எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டு, டாலர் கொடுத்து வளைகுடா நாடுகளிடம் எண்ணெய் வாங்குவதால் 700 பில்லியன் டாலர் கையிருப்பு வேகமாக கரைந்து வருகிறது. இந்த இருப்பு இன்னும் 8 மாதங்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்பதால் நிதி நெருக்கடி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

மறுபுறம் அமெரிக்காவின் வரி விதிப்பு மற்றும் ஹர்முஸ் நீரிணை அடைப்பு காரணமாக இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் 18 சதவீதம் வரை பாதிக்கப்பட்டுள்ளது. இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் இடையிலான வர்த்தக பற்றாக்குறை 94 பில்லியன் டாலராக அதிகரித்துள்ள நிலையில், உள்நாட்டு உற்பத்தியும் சரிவைச் சந்தித்துள்ளது. டிரம்ப்பின் கொள்கைகளை நம்பி மத்திய அரசு எடுத்த வெளியுறவு நிலைப்பாடே இந்த பொருளாதார சிக்கலுக்கு முக்கிய காரணம் என்று வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *